இலங்கை புகைப்படக் கலைஞருக்கு சவூதி அரேபிய இளவரசரிடமிருந்து அங்கீகாரம்!

Date:

இலங்கையைச் சேர்ந்த  காணொளி வடிவமைப்பாளரும் புகைப்பட கலைஞருமான முஹம்மத் ஸைத்க்கு (Mohamed Zaidh) சவூதி அரேபிய இளவரசர்  ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து (President of the ICRE)  பாராட்டு சான்றிதழும் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த ஜுலை மாதம் 01 ஆம் திகதி சவூதி அரேபியாவின் தாயிப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவான ‘பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா’ (Crown Prince Camel Festival) ஆரம்பமானது.

இம்முறையும் போட்டிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒட்டகங்கள் வருகைத்தந்து, ஆரம்ப கட்டங்களுடன் 350 போட்டிகள் நடாத்தப்பட்டன.

ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இப்போட்டி நிகழ்ச்சியில் காணொளி வடிவமைப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றிய இலங்கை கொட்டராமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஸைத் (Mohamed Zaidh) அவரது சேவையை பாராட்டி சவூதி அரேபிய இளவரசர் ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து சேவை பாராட்டு சான்றிதழும் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழாவை காண சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதரவர் பக்கீர் அம்சா (Pakeer Amza) அவர்களும் வருகைத் தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை தளமாகக் கொண்ட NEWSNOW.LK யின் முன்னாள் தயாரிப்பாளரான Mohamed Zaid அவர்களுக்கு Newsnow குழுமத்தின் வாழ்த்துக்களும் பாராட்டும் உரித்தாகட்டும்!

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...