ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய சர்வதேச விசாரணை தேவை!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய சர்வதேச விசாரணையொன்று அவசியமாகும்.

அதனை செய்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக நான் போட்டியிட்டிருந்தேன். பேராயர் கர்தினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு இந்தத் தேர்தலில் கூயிருந்தார்.

இந்த நாட்டின் மக்களுக்கு, நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன. அந்த பிரச்சினைகளில் இருந்து நாங்கள் பின்வாங்கினோம், கோட்டாபய முன்னிலை ஆகினார் என்பதே உண்மை. அந்த நம்பிக்கையில்தான் அவரை மக்கள் ஜனாதிபதியாக்கினர்.

வெளிநாட்டு ஆய்வொன்றில், வெளிநாட்டு ஊடகமொன்றில் எமது நாட்டின் அதிகாரிகளுக்கு விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வேண்டுமென கூற வேண்டுமா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை கண்டறிய வெளிநாட்டு உபதேசங்கள் எமக்கு அவசியமா? எமது நாட்டின் ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இல்லையா? உண்மைகளை கண்டறியவும், உண்மையை பேசவும் எமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு பொறுப்பில்லையா?என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் பேராயர் கர்தினால் எனக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறியதற்கு நான் கவலைப்படவில்லை. அவர் தமது மனதுக்குள் இருந்த கவலை காரணமாக அவ்வாறு கூறியிருந்தால் நான் அதற்காக கவலைப்பட போவதில்லை.

கிறிஸ்தவ மக்களுக்கு இன்னமும் இந்த கவலை இன்னமும் உள்ளது. எமது நாட்டின் உள்ளக விசாரணைகளின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய முடியாது. இதற்கு சர்வதேச விசாரணையொன்று அவசியமாகும்.

பேராயர் கர்தினாலுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாம். கிறிஸ்தவ மக்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாம். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்துக்கு வருவதற்கு மாத்திரமே தேவை இருந்தது. ஆனால், கிறிஸ்தவ மக்களின் மனங்களில் இன்னமும் அந்த வேதனை உள்ளது.

ஆகவே,உடனடியாக சர்வதேச விசாரணையொன்று அவசியமாகும். அதற்கு அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா என கேட்கிறோம்“ என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...