ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல இரகசியங்களை வெளியிட்ட ‘சனல் – 4!

Date:

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ‘செனல் 4’ ஊடகமொன்றினால் ஆவண படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘ஸ்ரீ லங்கன் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்’ என்ற பெயரில் குறித்த ஆவணப்படம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.35 அளவில் ஒளிபரப்பட்டது.

இதில் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணி தொடர்பில் தகவலாளரான ஹன்சீர் அஷாட் மௌலானா தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரக்காந்தனின் முன்னாள் நிதி மற்றும் ஊடக பொறுப்பாளராக செயற்பட்டிருந்தார். அத்துடன் பெயர் வெளிப்படுத்தப்படாத முன்னாள் அரச அதிகாரி ஒருவரும் இதில் தகவல் வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் குறித்த ஆவணப் படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தம்மால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் உண்மை எனவும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேவுக்கும், ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்த தாக்குதல் தாரிகளுக்கும் இடையில் ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக, தாம் 2018 இல் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ததாக தகவலாளரான ஹன்சீர் அஷாட் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தை அடுத்து தம்மிடம் வந்த சுரேஷ் சாலே,

ராஜபக்ஷக்கள் இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் 6 மாதங்களில் தாம் நாட்டை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்ததாக தகவலாளரான ஹன்சீர் அஷாட் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல எனவும் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...