கப்பல்களில் ஏற்படும் எண்ணெய் கசிவை கண்டறிய உதவும் பிரான்ஸ் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்டறியும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

செயற்கைகோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடல்பரப்புக்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன.

இந்த நிலைமையானது இலங்கையின் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சுழல் அமைப்பை கடுமையாக பாதித்தது.

இந்த நிலையிலே, நிலைமைகளை கண்காணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...