காலி டிக்சன் சந்தியில் மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரான கோடிஸ்வர வர்த்தகர் லலித் வசந்த மெண்டிஸ் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியில் உள்ள மிகப் பெரிய ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான 60 வயதான லலித் வசந்த மெண்டிஸ் , தனது வர்த்தக நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகியுள்ளார்.
ரி.56 ரக துப்பாக்கியில் லலித் வசந்த மெண்டிஸ் சுடப்பட்டுள்ளதுடன் அவரது உடலை 15க்கும் மேற்பட்ட தோட்டக்கள் நுழைத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரை பின் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. லலித் வசந்த மெண்டிஸ் காரின் சாரதி ஆசனத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காலி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.