கிழக்கு ஆளுநரை பதவி விலக்க கையெழுத்துகளை திரட்டும் பிக்குகள்!

Date:

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் நடவடிக்கை ஐக்கிய சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று காலை முதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் கையெழுத்துகள் இதில் திரட்டப்படுகின்றன.

திருகோணமலை-நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் கடந்த 28ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசமாகும். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறானதொரு செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக செயற்படுவீர்கள் என ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்திருந்தார்.

பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், ஆளுநரை பதவி விலக்க வேண்டுமென வலியுறுத்தியே ஒரு இலட்சம் கையெழுத்தை திரட்டும் நடவடிக்கையை ஐக்கிய சங்கம் ஆரம்பித்துள்ளது.

 

Popular

More like this
Related

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...