கையை இழந்த மாணவிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்ற பாடசாலை சமூகம்

Date:

யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனக் குறைவினால் தனது கையை இழந்த மாணவி மீண்டும் தனது கற்றல் செயற்பாட்டிற்காக இன்று பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலை சென்ற மாணவியை சக மாணவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றதுடன், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோரும் மாணவியை வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த சாண்டிலியன் வைசாலி எனும் 8 வயது மாணவி யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு எதிர்பாராத விதமாக சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம், மத்திய சுகாதார அமைச்சு ஆகியன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி இன்றைய தினம் மீள தனது கற்றல் செயற்பாடுகளை தொடர பாடசாலைக்கு சென்ற வேளையில் மாணவியை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...