ஜனாதிபதிக்கு பேஸ்புக்கில் கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்: குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது முகப்புத்தகத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்பாவெல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை  (07) தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

இதனைமுன்னிட்டு சந்தேகநபர் முகப்புத்தகத்தில் ஜனாதிபதியை கொலை மிரட்டல் விடும் விதத்தில் பதிவிட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பதிவில் “ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவரைக் கண்டு பிடிக்க முடியுமா? நாட்டை சீரழித்தவர் வருகிறார்” என சந்தேக நபர் பதிவிட்டுள்ளார்.

பதிவு குறித்து உடனடியாக அறிந்து கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...