ஜெனிவா சென்ற ‘செனல் 4’ குழுவினர்: குண்டுத் தாக்குதல்கள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

Date:

‘செனல் 4’ தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் அந்த ஊடகத்தின் ஒரு குழுவினர்  ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக  பிரபல சமூக ஆர்வலர் ஷெஹான் மலேகா கமகே தெரிவித்தார்.

‘செனல் 4 ‘குழுவினர் இந்த கூட்டத் தொடருக்கு இணையாக நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு குண்டுத் தாக்குதல்கள் குறித்த தகவல்களை இராஜதந்திரிகளுக்கு வெளிப்படுத்த கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின்  54 ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

இந்த அமர்வில் இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் செனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம்  மீண்டும் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதுடன், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள பின்புலத்தில் செனல் 4 குழுவினர் இவ்வாறு ஜெனீவா சென்றுள்ளனர்.

செனல் 4 குழுவினர் இந்த வாரத்தில், இது தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படம், ஆதாரங்கள், உண்மைகள் மற்றும் ஏனைய தகவல்களை  உலகின் அனைத்து நாடுகளின் இராஜதந்திரிகளும் வழங்குவார்கள் எனத் தெரியவகிறது.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...