முசலி சிலாபத்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா திட்டமிட்டபடி அன்று நடைபெற மாட்டாது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதனாலேயே தேசிய மீலாத் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய மீலாத் விழா எப்போது நடைபெறும் என அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக திணைக்களத்தின் பணிப்பாளர் இட்.ஏ.எம்.பைசல் தெரிவித்தார்.
தேசிய மீலாத் நிகழ்வினை முன்னிட்டு 10 பள்ளிவாசல்கள் தலா ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளன அத்தோடு இந்து கோயிலொன்றும் பௌத்த ஆலயமொன்று புணரமைக்கப்படவுள்ளன.
அன்றைய தினம் மீலாத் தின நினைவாக விசேட முத்திரை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இரத்ததான ஏற்பாடுகளும் நாடு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.