நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களுக்கு கடும் நடவடிக்கை: சுகாதார அமைச்சு

Date:

முன்னறிவிப்பின்றி வெளிநாடு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணர், முன் அறிவித்தல் இன்றி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய சம்பவத்தை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் முன் அனுமதியின்றி மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போதைய சூழலில், மருத்துவர்கள் பல காரணங்களை கூறி நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.

எவ்வாறாயினும், முன்னறிவிப்பு இன்றி ஒரு மருத்துவர் நாட்டை விட்டு வெளியேறினால், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

“இனிமேல், அத்தகைய மருத்துவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளுடன் கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். நடவடிக்கைகளின் தன்மை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து தங்கள் பொறுப்புகளை புறக்கணித்த மொத்தம் 103 விசேட மருத்துவர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல மருத்துவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...