தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகின்ற 35 வது சர்வதேச ஓபன் மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டுள்ள புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களான எம்.எஃப்.எம். ஹுமாயூன், எம்.எஃப்.எம். துபையில் ஆகியோர் அங்கு சென்று போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற உயரம் பாயுதல் போட்டியில் ஆசிரியர் ஹுமாயூன் அவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் தனது பாடசாலைக்கும், தனது ஊருக்கும், தாய் நாட்டுக்கும் பெருமையையும், புகழையும் பெற்றுத் தந்த ஆசிரியர் ஹுமாயூன் அவர்களை நியூஸ்நவ் வாழ்த்துகிறது.