போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் பியானோ வாசித்த பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்!

Date:

நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், எதிர்ப்பாளர்களை பியானோ இசைத்து மகிழ்வித்த அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த எதிர்ப்பாளர்களால், ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட நாளில் பாதுகாப்பிற்காக கான்ஸ்டபிள் தயாரத்ன நியமிக்கப்பட்டார்.

இதன்போது ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருந்த பியானோவில் அமர்ந்து, அதன் அறைகள் வழியாக சென்றுகொண்டிருந்த மக்களுக்கு பாடலை இசைத்திருந்தார்.

“கட்டிடத்தை சேதப்படுத்தும் போது தயாரத்ன பியானோ வாசித்துக் கொண்டிருந்தார்” என்று பெயர் வெளியிடாத ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கான்ஸ்டபிள் ஒழுக்கத்தை மீறியதாக பொலிஸ் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

ஜூலை 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி மாளிகை தாக்கப்படுவதற்கு முன்பு, கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி பல மாதங்களாக எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே முகாமிட்டிருந்தனர்.

எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர், பின்னர் அங்கிருந்த நீர் தடாகத்தில் உல்லாசமாக இருப்பதையும், ராஜபக்சவின் படுக்கையில் அறையில் மகிழ்ச்சியாக இருந்தமையையும் காண முடிந்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மாளிகையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை திருப்பி கொடுத்தவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...