யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்: ஐவர் காயம்!

Date:

யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் வீடொன்றின் மீது இன்று (16) அதிகாலையில் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டிலிருந்து யுவதியொருவரை காதலித்த நபரொருவராலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடொன்றில் மீது இன்று அதிகாலை 4.20 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உரும்பிராயை சேர்ந்த இளைஞன் ஒருவரும், அவருடன் வந்த குழுவினருமே தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய பின்னர், வீட்டுக்குள் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.

உரும்பிராயை சேர்ந்த இளைஞன், அந்த வீட்டிலுள்ள யுவதியில் ஒரு தலைக்காதல் கொண்டிருந்ததாகவும், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...