லசந்தவை கொலை செய்தவர்கள் சபையில் இருக்கின்றனரா?: சஜித் கேள்வி

Date:

ஊடகவியலாளர் லசந்த விக்ரமசதுங்க  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்திற்கு பெரும் பலமாக இருந்தவர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை நடத்தாதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் இந்த சபையில் இருக்கின்றாரா? என சஜித் பிரேமதாச மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு தான் அஞ்சவில்லை எனவும் இறக்கவும் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு வெளியிட்ட இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான ஆவணப்படுத்தலில், லசந்த விக்ரமதுங்கவை, கொழும்பு திரிபோலி இராணுவ முகாமில் இயங்கி வந்த ஆயுதக்குழுவே கொலை செய்ததாக தெரிவித்திருந்தது.

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...