லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 11,300க்கும் அதிகமானோர் உயிரிழப்பு: உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

Date:

லிபியாவில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் மழையினால் உயிழந்தோரின் எண்ணிக்கை 11,300ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

10,100 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது.

டேனியல் எனப்படும் இந்த புயல் கடந்த 10ஆம் திகதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்த நிலையில் அப்போது அது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது.

கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்தநதியில் கட்டப்பட்டுள்ள இரு அணைகள் உடைந்தன.

இதனால் டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில் தற்போது புயல் மற்றும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக உயிழந்தோரின் எண்ணிக்கை 11,300ஐ தாண்டியுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லிபியாவுக்கு துருக்கி, எகிப்து, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...