ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் உருவபொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இன்று(15) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வது நினைவு நாள் நாளை (16) சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என்றே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் உட்பட பொதுமக்களின் ஒரு பகுதியினர் கலந்து கொண்டனர்.

இதன்போது ரவூப் ஹக்கீம் உட்பட பிரமுகர்களுக்கு எதிராக கோசம் எழுப்பினர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

சாய்ந்தமருது காவல்துறையினர் வீதி போக்குவரத்தை சீர்செய்ததுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...