ஹங்கேரி-பல்கேரியா இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம்!

Date:

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 5-வது மக்கள்தொகை உச்சி மாநாடு நடைபெற்றது.

இதில் இத்தாலி, பல்கேரியா, ருமேனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பல்கேரியா நாட்டின் ஜனாதிபதி ருமென் ராதேவை ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் சந்தித்து எரிசக்தி பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்.

இதனையடுத்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களும் கைச்சாத்திட்டுள்ளன.

மேலும் இந்த உச்சி மாநாட்டில் தான்சானியா துணை ஜனாதிபதி பிலிப் எம்பாங்கோவிடம் சுற்றுலா, மீன்வளம், நீர் மேலாண்மை போன்ற துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஹங்கேரி பிரதமரின் ஊடகப் பேச்சாளர் பெர்டலான் ஹவாசி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...