அபுதாபியில் இலங்கையருக்கு கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம்!

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற ‘Big Ticket’ அதிர்ஷ்ட இலாப லொத்தர் சீட்டிழுப்பில், இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் (சுமார் 176 கோடி ரூபா) பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

‘Big Ticket’ அதிர்ஷ்ட இலாப லொத்தர் சீட்டிழுப்பு அண்மையில் நடத்தப்பட்டதுடன் இதில் இலங்கையை சேர்ந்த துரைலிங்கம் பிரபாகர் பரிசுக்குரியவரானார்.

துரைலிங்கம் பிரபாகர் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார், தற்போது துபாயில் உள்ள வாலட் சேவை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார்.

கடந்த 5 வருடங்களாக வெற்றியை எதிர்பார்த்து லொத்தர் சீட்டுகளை வாங்கிவந்த துரைலிங்கம் பிரபாகர், இந்த வெற்றிக்குரிய லொத்தர் சீட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் Online ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த வெற்றி தொடர்பில் பிரபாகரின் நண்பரிடம் வினவிய போது, இன்னும் இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...