ஆயிரம் ரூபாய் வரை உயிர்த்த வேண்டிய இடத்திலேயே 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம்: முதித பீரிஸ்

Date:

ஆயிரம் ரூபாய்வரை உயிர்த்த வேண்டிய இடத்திலேயே 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எரிவாயுவின் விலை இம்மாதம் அதிகரிக்கும் என்பதை நாம் கடந்த மாதமே அவதானித்திருந்தோம். இதனால், 10 ஆயிரம் டொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை, இம்மாதத்திற்கும் சேர்த்தே நாம் கொள்வனவு செய்திருந்தோம்.

தற்போது சுமார் 100 டொலர் அளவில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்புடன், கடந்த மாத அதிகரிப்பையும் சேர்த்துப் பார்க்கையில், 900 முதல் 1000 ரூபாய்வரை அதிகரிப்பு காணப்படுகிறது.

எவ்வாறாயினும், நாம் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 145 ரூபாய் மட்டும் உயர்த்தியுள்ளோம்.

கடந்த 7 மாதங்களுக்கும் முன்னர், உலக சந்தையில் தற்போது இருக்கும் இதே விலை தான் அன்றும் காணப்பட்டது. ஆனால், டொலர் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக நாட்டில் சிலிண்டர் ஒன்று, அப்போது 4186 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்று எமது நிறுவனம் பலமடைந்த காரணத்தினால்தான், மக்களுக்கு சுமையேற்படுத்தாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்து வந்த நாம், நீண்ட காலத்திற்கு பின்னரே விலையை உயர்த்தியுள்ளோம்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ரூபாய்வரை குறைத்தே தற்போது 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம்.சில இடங்களில் எரிவாயு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.- என்றார்.

 

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...