இணையத்தளம் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தான் பதிலளிக்க போவதில்லை என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சூம் தொழிற்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இணையத்தளம் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இணையத்தளம் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள் தொடர்பாக நாட்டுக்குள் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்த ஊடகவியலாளர்கள் தனியுரிமை கொண்டுள்ள நபர்கள். யூடியூப் என்பது பொறுப்புக்கூறும் ஊடகம் அல்ல.
இப்படியான பொறுப்பு கூறல் இன்மையே இலங்கையின் அபிவிருத்திக்கு பெரும் தடையாக உள்ளது எனவும் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.