இந்தியாவில் பரவும் நிபா வைரஸ்: இலங்கையை தாக்குமா?

Date:

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறிவதற்கான விசேட பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸை கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் வைரஸ் தொடர்பான விசேட வைத்தியர் டொக்டர் ஜானகி அபேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நிபா வைரஸ் பரவுவது மிகவும் மெதுவாக இருப்பதால், நாடுகளுக்கு இடையில் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் துறையின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...