இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் சர்ச்சை

Date:

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின்  இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்ட விடயம் சர்வதேச அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வார இறுதியில் இறுதியில் இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதுடன், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான திகதி தொடர்பிலும் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

‘Shi Yan 6’ எனும் சீன கடல்சார் ஆய்வு கப்பல் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரிய பின்னணியிலே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமைவதாக குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச ரீதியில் பல்வேறு அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையினர் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் நான்காவது பலம் வாய்ந்த இராணுவ சக்தியாக கருதப்படும் இந்திய பாதுகாப்பு படையின் தலைவரின் வருகை இரத்து செய்யப்படுவது பாரிய பிரச்சினை என அரசியல் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விஜயத்தின் பொது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...