‘இளைஞர்கள் உயர் கல்வி கற்பதானது காலத்தின் தேவையாக மாறியுள்ளது’

Date:

கல்வியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே
அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.

புத்தளம் ஐ.சொப்ட் உயர் கல்வி நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் புத்தளம் மரிக்கார் வீதியில் அமைந்துள்ள கந்தையா கேட்போர் கூடத்தில் ஐ.சொப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.கே.எம்.அப்ராஸ் தலைமையில் நடைபெற்ற போது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இளைஞர்கள் உயர் கல்வி கற்பதானது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

கல்வியலாளர்கள் தமது நடவடிக்கைகளை கல்வியின் பால் மாத்திரம் நிறுத்தி விடாமல் அரசியலுக்குள்ளும் பிரவேசித்தால் மாத்திரமே அரசியலில் சிறந்ததொரு மாற்றத்தை கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார்.

-எம்.யூ.எம்.சனூன்

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...