இம்முறை 2022 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இரண்டு தினங்களின் பின்னர் குருநாகல் மல்லியதேவ கல்லூரியின் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
கணிதப் பிரிவில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகவிருந்த குருநாகல் வெல்லவ தொரயாய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான ஆர்.ஜீ.மனுஜய என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவன் கடந்தாண்டு நடைபெற்ற உயர் தரப்பரீட்சையில் கணிதப் பிரிவில் இரண்டாவது முறையாக தோற்றியிருந்தார். அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின்படி அவர் மூன்று ‘B’ தேர்ச்சியை பெற்றிருந்தார்.
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய இந்த மாணவன் குருநாகல் மல்லவப்பிட்டிய நகரில் உள்ள மக்கள் வங்கி கிளையில் தற்காலிகமாக தொழில் புரிந்தும் வந்துள்ளார்.