உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும்: முத்தையா முரளிதரன்!

Date:

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணத் தொடரை இந்தியா நடத்துகின்றது. போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும். ஏனெனில் அவர்கள் சிறந்த அணி. மேலும் சொந்த மைதானங்களில் சாதகமான சூழ்நிலை உள்ளது.

அத்துடன் கோடிக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. இது இந்திய வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நிலைமையாக உள்ளது.

இந்திய அணிக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...