கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு நாட்டிற்கு வருகை!

Date:

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அழைப்பிற்கிணங்க அந்த குழுவினர் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் 3 செயன்முறைகளின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்நாட்டு அதிகாரிகளை தௌிவுபடுத்தவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்து மற்றும் கடலோர குழாய் அமைப்புகளில் காணப்படும் கோளாறுகள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுத்தல், கப்பல் விபத்துகள் ஏற்பட்டால் அதன் பாதிப்பை சரியாக மதிப்பிடுதல் மற்றும் அவ்வாறான பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கான சரியான நடைமுறை ஆகிய செயன்முறைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்தப்படவுள்ளது.

இந்த தௌிவுபடுத்தலுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இடர்முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

போதுமான தொழில்நுட்ப அறிவின்மையால் X-Press Pearl கப்பல் விபத்தின் பின்னர் நாட்டிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டின் பின்னர் நாட்டின் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...