நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஜஸ்வர் உமர் இலங்கையின் கால்பந்து தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார்.
ஜஸ்வர் உமர் 67 லீக்குகளில் 45 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தக்ஷித சுமதிபால 20 வாக்குகளையே பெற்றார்.
ஜஸ்வர் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்தவர். அவர் கால்பந்து உலக அமைப்பான FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) மேட்ச் கமிஷனராகவும், கால்பந்து நடுவராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.