சிறைச்சாலைகளில் பரவும் அம்மை நோய்: கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை!

Date:

சிறைச்சாலைகளில் தற்போது பரவி வரும் அம்மை நோயை விரைவாகக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

எனவே சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளுக்கு உடனடியாக தடுப்பூசியை செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார்.

கடந்த சில வாரங்களில் கொழும்பு விளக்கமறியல் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதோடு சுமார் 20 கைதிகள் மற்றும் அதிகாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் அம்மை நோய் வெளி சமூகத்திற்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்துவது சிறைச்சாலை திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...