சீரற்ற காலநிலையால் சந்திவெளி பகுதியில் வாகன விபத்து: இருவர் பலி!

Date:

(உமர் அறபாத் ஏறாவூர்)

வாழைச்சேனை பிரதான வீதியில் சந்திவெளி பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் இருவர் மரணமடைந்ததுடன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்/போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேளையிலே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகம்மது இப்ராகிம் முகம்மது குசைன் (54) மற்றும் முகம்மது நுபைல் ஹிபா செரீன் (04) வயது சிறுமியும் இவ்விபத்தில் மரணம் அடைந்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை நிலவிய வேளையிலே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...