தென்மேற்கு பருவமழை காரணமாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (07) காலை 9.30 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களில் இவாறு மழை காலநிலை காணப்படும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வரக்காபொல பிரதேசத்தில் அதிகபட்சமாக 60 மில்லிமீற்றர் ம மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது