ஜி20 மாநாடு: முதல்முறையாக இந்தியாவுக்கு பயணமானார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

Date:

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி சி ஜின் பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.

இதேபோன்று, ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.

இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன் விமானம் மூலம் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார்.

ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் பைடனை வரவேற்றனர்.

புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய இரவு விருந்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற இருக்கிறது.

இன்றைய சந்திப்பைத் தொடா்ந்து, நாளை 9ஆம் திகதி மற்றும் நாளைமறுதினம் 10ஆம் திகதிகளில் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார்.

 

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...