தனி நபர் சுதந்திரத்தை மறுக்கும் பிரான்ஸ்: அபாயா அணிவதற்கு பிரான்ஸ் அரசு விதித்த தடையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் உறுதி செய்தது!

Date:

பிரான்ஸ் அரசினால்  பாடசாலைகளில் மாணவிகள் அபாயா(Abaya) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

புதிய கல்வி ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், இந்த சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது.

அரச பாடசாலைகளில் மற்றும் அரசாங்க கட்டடங்களில் மத அடையாளங்களுக்கு பிரான்ஸ் கடுமையான தடைகளை விதித்துள்ளது. அவை மதசார்பற்ற சட்டங்களை மீறுவதாக அந்நாட்டு அரசாங்கம் வாதிட்டுள்ளது.

பல மாதங்களாக நடைபெற்று வந்த வாதப்பிரதிவாதங்களை அடுத்தே அபாயாவைத் தடை செய்யும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிவதற்கு 2004 ஆம் ஆண்டு தொடக்கம் தடை நீடித்து வருகிறது.

“வகுப்பறைக்கு வரும்போது மணவனாக அடையாளம் காணப்பட வேண்டும்” என்று கல்வி அமைச்சர் கப்ரில் அட்டால் பிரான்ஸின் தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

“பாடசாலைகளில் அபாயா அணிவதை தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

பல மாதங்கள் இடம்பெற்ற விவாதங்களுக்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் அபாயா அணிவது அதிகரித்துள்ள நிலையில் அதனை தடை செய்வதற்கு தீவிர வலதுசாரிகள் அழுத்தம் கொடுப்பதோடு முஸ்லிம் பெண் உரிமை பற்றி குரல்களும் வலுத்து வருகின்றன.

2013 ஆம் ஆண்டு முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு பிரான்ஸ் தடை விதித்தபோது அந்நாட்டில் வசிக்கும் ஐந்து மில்லியன் முஸ்லிம் மக்களிடையே எதிர்ப்பு வலுத்திருந்தது.

இந்நிலையில், முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு சங்கம் இது பாரபட்சமானது என்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டக்கூடியது என்றும் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மாநில கவுன்சிலில் மனு தாக்கல் செய்தது.

பிரேரணையை ஆராய்ந்த பின்னர், மாநில கவுன்சில் குறித்த பிரேரணையை நிராகரித்தது, ஆடைகளை அணிவது ‘மத உறுதிப்பாட்டின் தர்க்கத்தைப் பின்பற்றுகிறது’ என்று தெரிவித்தது.

இந்தத் தடை பிரான்ஸ் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது, இது பாடசாலைகளில் எந்தவொரு மதச் சார்பின் அடையாளங்களையும் யாரும் அணிய அனுமதிக்காது என்று கவுன்சில் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த தடையானது, ‘தனிப்பட்ட வாழ்க்கை, மத சுதந்திரம், கல்வி உரிமை, குழந்தைகளின் நல்வாழ்வு அல்லது பாகுபாடு காட்டாத கொள்கை ஆகியவற்றிற்கு சட்டவிரோதமான பாதிப்பை விளைவிக்கும்’ என்று கவுன்சில் மேலும் கூறியது.

இதனையடுத்து நீதிமன்ற விசாரணையின் போது சட்டத்தரணி வின்சென்ட் ப்ரெங்கார்ட், அபாயா ஒரு பாரம்பரிய ஆடையாக கருதப்பட வேண்டும், மதம் சார்ந்ததாக கருதப்படக்கூடாது என்று வாதிட்டார்.

இந்த தடை மூலம் பிரான்ஸ் அரசு அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

‘கிட்டத்தட்ட இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு அபாயா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.

இதேவேளை அண்மைய நாட்களில் பெரும் விவாதமாக மாறியுள்ள இந்த தடை தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்துத் வெளியிட்டுள்ளார்.

“பாடசாலைகளில் மத அடையாளங்களுக்கு அனுமதி இல்லை. கல்வி நிலையங்களை, சமமாக நடத்தவும், ஜனநாயகத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளவும் நான் ஆதரவாக உள்ளேன். இதேவேளை, யாரையும் களங்கப்படுத்துவது நோக்கமல்ல.

பாடசாலை வளாகம் சமமான ஒரு இடமாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளும் பிரிவுகளை உணரக்கூடாது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நாம் கட்டாயமாக இது தொடர்பாக புரிதல் ஏற்படுத்த வேண்டும்” என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை தொடங்கிய  முதல் நாள் அன்று, சுமார் 300 இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு அபாயா அணிந்துவந்துள்ளனர். அவர்களில் பலர் அதை அகற்ற ஒப்புக்கொண்ட போதிலும், 67 மாணவிகள் அபாயாவை அகற்ற மறுத்துள்ளனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...