தோட்டக்காட்டான்’ சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம்: முரளி படத்தில் இடம்பெறும் வார்த்தைக்கு மனோ கண்டனம்

Date:

800 படத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவரவுள்ள 800  படத்தின் முன்னோட்ட காணொளியில் “தோட்டக்காட்டான்” என்ற சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் இடம்பெற்றிருந்தது.

“இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில்,  தடை செய்யப்பட்ட  வார்த்தையை உங்கள் பட முன்னோட்டத்தில்  பயன்படுத்த வேண்டாம்.

அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து காட்டியுள்ளேன். கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம். நானே ஒரு கதாசிரியர்.

எனக்கு இது தெரியும். அந்த இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று பயன்படுத்துங்கள், சரியாக வரும்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...