-ஏ.எஸ்.எம்.ஜாவித்
அண்ணல் நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தெவட்டகஹ செய்யக் உஸ்மான் வலியுல்லாஹ் தர்ஹா மற்றும் பள்ளிவாசலின் கொடியேற்றம் அண்மையில் பெருந்திரளானவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
தெவட்டகஹ பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த செய்யத் அப்துல் கரீம் தங்கள், பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், கலாநிதி ஹஸன் மெளலானா உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அன்றைய தினம் மாலை இடம் பெற்ற கொடியேற்ற நிகழ்வை தொடர்ந்து நபியவர்களின் பெயரில் மெளலீது நிகழ்வு ஆரம்பமானது.
குறித்த மெளலீது வைபவம் 12 தினங்களுக்கு மாலை மஹ்ரிபு தொழுகையைத் தொடர்ந்து இடம் பெறும் எனவும் நபி பிறந்த தினமான எதிர்வரும் 28ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதான தமாம் வைபவம் இடம் பெறும் எனவும் தலைவர் தெரிவித்தார்.