ஜாமிஆ நளீமிய்யாவின் பொன் விழாவின் பிரதான நிகழ்வுகளில்
மற்றுமொரு நிகழ்வாக “நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு”
எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை 6:30
மணிக்கு கொழும்பு-07, சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை
மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நளீம் ஹாஜியார் நினைவுப் பேருரை மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி
ரிப்கி காஸிம் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் கலாநிதி
எம்.ஏ.எம். சுக்ரி- “வாழ்வும் பணியும்” என்ற தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யாவின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் (நளீமி) பிரதான உரை நிகழ்த்தவுள்ளார்.
முதல்வரின் பிரதான உரையைத் தொடர்ந்து “கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரிஅறிவுத் துறைப் பங்களிப்பும் ஆய்வுப் பணிகளும்” எனும் தலைப்பில் ஆய்வு நூல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து “கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி- அறிவுப்
பங்களிப்பு” எனும் தலைப்பில் ஜாமீஆ நளீமிய்யாவின் அரபு மொழி
கற்கைத் துறைத் தலைவர் கலாநிதி அஷ்ஷெய்க். ஏ.பி.எம். அப்பாஸ்
(நளீமி) விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இந் நிகழ்வில் ஜாமிஆ நளீமிய்யாவின் பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ். யாக்கூத் நளீம் அவர்கள் விசேட அதிதியாகவும், நளீமிய்யாவின் பழைய மாணவர்கள் அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.டி.எம் லாபீர் மதனி (நளீமி )அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து
கொள்ளவுள்ளனர்.
மேற்படி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வில் உலமாக்கள்,
கல்விமான்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நளீமிய்யாவின் விரிவுரையாளர்கள், நளீமிய்யாவின் பழைய மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பல்துறைசார் ஆளுமைகள் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக நளீம் ஹாஜியார் நினைவுப் பேருரை மன்றத்தின் செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் டி. ஷாகிர் (நளீமி) தெரிவித்துள்ளார்.