நாட்டின் 70 வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகள் இன்று முடங்கும்!

Date:

நாடு முழுவதிலும் உள்ள 70க்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக மதிய உணவு நேரத்தில் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் இயக்கம் ஆகியன தெரிவித்துள்ளன.

நாட்டின் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை காரணமாக ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உயர்தர சுகாதார சேவைகளை உருவாக்க போராட்டத்தின் ஊடாக அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்றும் நாளையும் இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது. “சுகாதார சேவைகள் ஆபத்தில்“ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

நாட்டு மக்களையும் சுகாதாரக் கட்டமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்களை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றும் வைத்தியர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...