நிலநடுக்கம் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மோரோக்கா மற்றும் லிபியா மக்களுக்கு கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

Date:

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மோரோக்கோ மக்களுக்கும் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபியா மக்களுக்கும் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை ஒன்று இடம் பெற்றது!

அன்மையில் மோரோக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினாலும் மற்றும் லிபியாவில் இடம் பெற்ற வெள்ளத்தினாலூம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மோரோக்கோ, லிபியா நாடுகள் வெகு விரைவில் வலமையான நிலைக்கு திரும்பவும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வு கொழும்பு 07 தெவட்டகஹ அஷ்-ஷெய்க்க்ஹ் உஸ்மான் வலியுல்லாஹ் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று 2023/09/15-ம் திகதி நடைபெற்றது.

பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் சாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காயிப் ஜனாஸா தொழுகையை சங்கைக்குறிய அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் அப்துல் கரீம் தங்கள் அல்-ஐய்துரூஸி அவர்கள் நடாத்தியதுடன் விஷேட துஆ பிரார்த்தனையை அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலனா அல்-காதிரி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஸாதாத்மார்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் உட்பட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...