பிரித்தானிய லெஸ்ரர் பல்கலைக்கழக, துணைவேந்தராக இலங்கையர்

Date:

யாழ்ப்பாணம் சென்-ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி லெஸ்டர் பல்கலைக்கழகம் 167ஆம் இடத்திலும் பிரித்தானியாவில், 25ஆம் இடத்திலும் உள்ளது.

பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகிக் கல்வியைப் பெற்றவர் ஆவர்.

1966இல் சுண்டிக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தந்தை கனகராஜா யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் தாய் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் இருந்தவர்கள் ஆவர்.

பேராசிரியர் நிஷான் கனகராஜா 2019இல் இருந்து லெசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் (University of Leicester) உபவேந்தராக இருந்து வருகின்றார்.

அவர் மீளவும் இரண்டாம் தடவை உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...