தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் சர்வமதத் தலைவர்களுக்கிடையில் விஷேட கலந்துரையாடல்!

Date:

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள தர்மநிலையத்தின் விஹாராதிபதி கலாநிதி எல்லே குணவன்ச நாயக்க தேரர் தலைமையில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் விஷேட கலந்துரையாடலொன்று நே‌ற்று (20) நடைபெற்றது.

இக்கலந்துறையாடலில் கலாநிதி எல்லே குணவன்ச நாயக தேரர், சிவ ஸ்ரீபாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி நிஷான் குரே பாதிரியார் உட்பட பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது இலங்கை நாட்டை கட்டியெழுப்பும் வண்ணம் மதங்களுக்கு இடையே மத நல்லுறவையும் தேசிய ஐக்கியத்தையும் பேணுவதில், சர்வமத அமைப்பினரின் பங்கு முக்கியம் என்பதை பற்றியும், அதன் விரிவான திட்டங்கள் பற்றியும் விஷேடமாக ஆலோசிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...