முத்தையா முரளிதரனின் ‘800’பயோபிக் பட ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்!

Date:

இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படுள்ள 800 படத்தின் ட்ரெய்லரை சச்சின் இன்று மும்பையில் வெளியிட உள்ளார் .

கடந்த 2020 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களும் வெளியாகியது. முரளிதரனின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதை குறிப்பிடும் வகையில் இந்த படத்திற்கு “800” என பெயரிடப்பட்டது.

தமிழில் எடுக்கப்படும் இப்படத்தை இந்தி, வங்காளம், சிங்களம் என டப்பிங் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

தொடர் சர்ச்சைகள் காரணமாக முரளிதரனே விஜய் சேதுபதியை இந்த படத்தில் விலகி கொள்ளுமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பான பதிவை குறிப்பிட்டு “நன்றி வணக்கம்” என விஜய் சேதுபதி பதில் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...