2023 செப்டெம்பர் 08 ஆம் திகதி மொரோக்கோவில் மராகேஷ்-சாபி பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் மற்றும் இந்த பேரழிவு பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிக்கிறோம்.
மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ். ரிஸ்வி முப்தி தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களதும் உலமாக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினதும் நினைவுகளும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடன் என்றும் இருப்பதாகவும், இந்த கடினமான சூழ்நிலையை சமாளிக்க அவர்களுக்கு வலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்,
மொராக்கோவில் பாதிக்கப்பட்ட பகுதி இந்த பேரழிவு சூழ்நிலையில் இருந்து விரைவாக மீண்டு வலுவடையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் எனவும் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மொரோக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிச்டர் அளவிலான பூகம்பத்தில் 3000 பேருக்கு மேல் மரணித்திருப்பதோடு இன்னும் இடிபாடுகளுக்கு மத்தியிலான தேடுதல்களும் நடைபெற்று பெறுகின்றன.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.