ஊடகவியலாளர் லசந்த விக்ரமசதுங்க தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்திற்கு பெரும் பலமாக இருந்தவர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உட்பட அரசாங்கம் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை நடத்தாதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் இந்த சபையில் இருக்கின்றாரா? என சஜித் பிரேமதாச மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு தான் அஞ்சவில்லை எனவும் இறக்கவும் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு வெளியிட்ட இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான ஆவணப்படுத்தலில், லசந்த விக்ரமதுங்கவை, கொழும்பு திரிபோலி இராணுவ முகாமில் இயங்கி வந்த ஆயுதக்குழுவே கொலை செய்ததாக தெரிவித்திருந்தது.