லிபியா வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ஆயிரம் பேர் பலி: 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை

Date:

லிபியாவில்  கனமழை காரணமாக இரண்டு அணைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லிபியா நாட்டில் கடற்கரை நகரமான டெர்னாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியதுடன், அருகில் உள்ள பகுதிகளிலும் வெள்ள நீரால் சூழப்பட்டன.

இதையடுத்து தொடர் மழை காரணமாக டெர்னா பகுதியில் அமைந்திருந்த இரண்டு அணைகளில் உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் வெளியேறிதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதைதத்தொடர்ந்து சுனாமி போன்ற ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்க இதுவரை 5 ஆயரித்து 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ள நீரில் சிக்கியவர்கள், கடலுக்குள் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் அந்நாட்டின் தேசிய மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

லிபியாவின் கிழக்கு பகுதி கடற்கரை பகுதியில் உருவான டேனியல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டெர்னா பகுதியை கடுமையாக தாக்கியது. இதில் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை கடுமையான சத்ததுடன் உடைந்த நிலையில், வெள்ள நீர் சீற்றத்துடன் டெர்னா நகரில் நுழைந்தது. அணை உடைப்பு காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் வசித்து வந்த நகரின் 25 சதவீதம் பகுதி வெள்ளி பாதிப்பால் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் டேனியல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏராளமான இறப்புகள், காயங்கள், கடுமையான சேதங்கள் அடைந்த லிபியாவிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது உண்மையான இரங்கலையும் ஒற்றுமையையும் தெரிவித்தது.

ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் (MoFA) லிபியா அரசுக்கும் அதன் மக்களுக்கும், இந்த துயரத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தது.

மேலும் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்று கூறியுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...