வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலம்!

Date:

100-120 நாட்கள் பயணித்து எல் 1 சுற்று வட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலனான இது, சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்த உள்ளது.

இந்த விண்கலம், சுமார் 400 கிலோ எடை கொண்டதாகும்.

சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கிருந்தபடி சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை தொடங்க இருக்கும் ஆதித்யா எல்-1, சூரியனை நாள் ஒன்றுக்கு 1,440 புகைப்படங்களை எடுத்தனுப்பும் திறன் கொண்டது.

நாம் சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி (டெலஸ்கோப்) கருவிகள், சூரியனை அருகில் இருந்து பார்ப்பது போன்ற பிரமாண்டத்தை காட்டும்.

இந்த விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும்.

ஆதித்யா எல்-1-ன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதுவரை இடைவிடாமல் ஆய்வு பணியை மேற்கொள்ளும்.

ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுண்டவுன் நேற்றுத் தொடங்கிய நிலையில் சரியாக இன்று காலை 11.50க்கு விண்ணில் பாய்ந்தது. ஆதித்யா எல்1 சோதனையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...