வைத்தியர் ஒருவரை உருவாக்க மக்கள் வரிப்பணத்திலிருந்து 4 மில். ரூபா ஒதுக்கப்படுகிறது’

Date:

இந்நாட்டில் வரி செலுத்தும் மக்களின் பணத்தில் வைத்தியர் ஒருவரை உருவாக்குவதற்கு சுமார் நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” மருத்துவ மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு கல்வியை நிறைவு செய்வதற்கு மக்களின் பணத்தில் இருந்து 40 இலட்சத்து 92,915 ரூபாய் செலவிடப்படுகிறது.

இது மாதாந்த அடிப்படையில் 68,215 ரூபாவாகும். வரி செலுத்துவோர் பொறியியல் மாணவர் ஒருவருக்கு 2.1 மில்லியன் ரூபாவும், முகாமைத்துவ மாணவருக்கு 1 மில்லியன் ரூபாவும், கலைத்துறை மாணவர் ஒருவருக்கு 1.3 மில்லியன் ரூபாவும் வரி செலுத்தும் மக்களின் பணத்திலிருந்து ஒதுக்கப்படுகிறது. ” என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...