1000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம்!

Date:

தாதியர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 1000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர்        கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, இணை சுகாதார பட்டதாரிகள் குழுவை சுகாதார அமைச்சின் பதவிகளில் உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தாதியர் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக 2019, 2020 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை நாளை (15) முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...