‘800’ திரைப்படத்தை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்ய அனுமதி!

Date:

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் முதல் முறையாக தனது சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு சர்வதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதனின் ‘800’ என்ற சுயசரிதை திரைப்படத்தை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானமானத்தை இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதனுக்கு செய்யும் அர்த்தமுள்ள மரியாதையாக கருதுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இந்த திரைப்படத்திற்கு மாத்திரம் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் சட்டவிதிகளுக்கு அமைய வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து, திரையரங்குகளில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

800 திரைப்படம்  நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளதுடன் சிங்களத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இலங்கையில் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...