A/L பரீட்சையில் சாதிக்கும் அரபுக் கல்லூரிகள் சமூகத்துக்கு சொல்லும் செய்தி என்ன?

Date:

ஆக்கம்: சாகிர் அப்பாஸி

எல்லோரும் ரிஸல்ட் ஷீட் போடுகின்றனர் என்பதற்காக பதிவிடும் ஒன்றல்ல இது.
இந்த மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடுகையில் சாதனையாளர்கள்.

வழமையான மத்ரஸா பாடங்கள், பரீட்சைகள் என பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இந்த பெறுபேற்றை பெற்ற இவர்கள் சாதனையாளர்கள்.

பாடசாலை வகுப்பு, மேலதிக வகுப்பு, கருத்தரங்கு என கிட்டத்தட்ட 2 வருடங்கள் முழுக்க தமது உயர்தர கல்வியை மாத்திரம் கற்கும் மாணவர்களுடன் ஒப்பிடுகையில் இவற்றுக்கு சற்றும் தொடர்பில்லாத இவர்கள் சாதனையாளர்கள்.

அரபு மொழியை கற்கை மொழியாகக் கொண்டு, தமிழில் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கும் இவர்கள் சாதனையாளர்கள்.

இஸ்லாம், அரபு பாடங்களுக்கான உயர்தர பாடத்திட்டம் இவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுவது கிடையாது. அவர்கள் சுயமாக கற்க வேண்டும். சந்தேகங்களை உஸ்தாத்மார்களை அணுகி கேட்கலாம்.

அந்த வகையில் சுயமாகக் கற்று பெறுபேறு பெறும் இவர்கள் சாதனையாளர்கள்.
பல்கலை பிரவேசம், பெறுபேற்று வீதம் என்பவற்றுக்கு அப்பால், இலங்கையின் தலைசிறந்த மத்ரஸா பாடத்திட்டம் என்றால் இது தான் என்ற வரிசைப்படுத்தலில் முதல் இடங்களில் தன்னையும் இணைத்துக் கொண்ட அரபுக்கல்லூரியின் மாணவர்களாக ஷரீஆத் துறையில் கடினமாக உழைத்துக் கொண்டு இந்த பெறுபேற்றை பெற்ற இவர்கள் சாதனையாளர்கள்.

இப்படி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி மாணவர்களின் பெறுபேற்றுக்கு பின்னால் மறைந்துள்ள அவர்களின் கற்றல் நுட்பங்கள், முறைகள் அவர்களை சாதனையாளர்களாக மாற்றுகின்றன.

எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கற்க முடியுமான சூழல் மாணவர்களுக்கு அங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சமூகம் படிக்க வேண்டிய முக்கியமான பல விடயங்கள் காணப்படுகின்றன.

மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், கடந்த கால வினாத்தாள் பயிற்சிகள் என எந்த ஒரு ஏற்பாடும் இல்லாமல் பெறுபேறு இல்லை என்ற மனநிலையை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு ஒரு செய்தி. இந்த மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமான பரீட்சைகளுக்கும் சுயகற்றல் மூலமே தயாராகின்றனர்.

எமது முயற்சி, அல்லாஹ்வின் உதவி ஆகியவற்றை நம்புவோம். அந்த ஆசிரியர் இந்த ஆசிரியர் என்று கருத்தரங்குகளை நம்பி வாழ்க்கைக்கு பிரவேசிக்கும் முன்னரே பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை இல்லாமலாக்கி விடாமல் இருப்போம்.

ஆசிரியரை நம்பும் அளவுக்கு பிள்ளைகளை நம்பாமல் இருப்பதாலேயே டியூஷன் தேவைப்படுகிறது. ஆனால் இங்கே மாணவர்கள் சுயமாக முன்னேற களம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...