2023 ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி இன்று (12) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணி மோதவுள்ளதுடன் இன்று பிற்பகல் 3:30 க்கு போட்டி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
என்றாலும் மழை குறுக்கீடு செய்யுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இன்றும் வானம் மப்பும் மந்தாரமுமான கால நிலையே காணப்படுகின்றது.